மைத்திரியின் கையில் என்ன நடந்தது?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி நேற்று மாலை கொழும்பு தாமரை தடாகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது ஜனாதிபதி தனது கையில் காயத்திற்கு போடும் கட்டுடன் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். இது குறித்து பலரின் பார்வையும் ஜனாதிபதியின் மீது விழுந்துள்ளது.

எனினும் காயம் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பம்பலப்பிட்டி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை கடந்த வாரம் ஜனாதிபதி சுகவீனம் அடைந்த நிலையில் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.