மஹிந்த அணி மகிந்தவுக்கு எச்சரிக்கை.??

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாட்டில் தற்போது நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்தக்கொண்டே செல்கின்றன. உலகிலுள்ள எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத வகையில் இலங்கை அரசாங்கம் மக்களை பழிவாங்கும் விதமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

மஹிந்த அரசாங்கத்தை குற்றம் சுமத்திவரும் இந்த நல்லாட்சி, 2015ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் ஜனநாயகத்தை சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.

வடமத்திய, கிழக்கு, சப்பிரகமுவ மாகாணசபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதோடு, அடுத்த மாதம் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளின் பதவிக்காலமும் நிறைவடையவுள்ளது. ஆனால், இந்த அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கான எந்தவொரு சமிக்ஞையையும் காண்பிக்கவில்லை. இது மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயற்பாடாகும்.

இவ்வாறான சர்ச்சைகள் நாட்டில் இருக்கும்போது எதிர்க்கட்சித் தலைவரோ இதுகுறித்து அரசாங்கத்தக்கு அழுத்தங்களை பிரயோகிக்காது, ஆதரவினை வெளிப்படுத்தி வருகிறது.

அவரது கட்சி பெரும்பான்மையாக இருக்கும் வடக்கு- கிழக்கு மாகாணசபைகள் வலுவிழந்துள்ள நிலையில்கூட எந்தவொரு கருத்தையும் கூறாமலேயே சம்பந்தன் இருந்துவருகிறார்.

இப்படியான ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருக்க தகுதியற்றவராவார். எனவே, தனது பதவியிலிருந்து அவர் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்.

இந்த அரசாங்கத்துக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தமுடியாவிட்டால், பொதுத்தேர்தலையேனும் நடத்துமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம். நாம், எந்தத் தேர்தலாக இருந்தாலும் முகம்கொடுக்கத் தயார் நிலையிலேயே இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

#srilanka  #semasinka  #Tamilnews   #Magintha   #Makintha  #Meeting

No comments

Powered by Blogger.