தெல்லிப்பளையில் இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட காணிகள் விடுவிப்பு!

யாழ்.தெல்லிப்பளையில் 51வது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணிகள் 4.7 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி குறித்த காணி விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே ஒரு பகுதி காணி விடுவிக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.