அம்மா கதாபாத்திரம் வேண்டாம் : ஐஸ்வர்யா ராஜேஸ்!

பல படங்களில் அம்மா கதாபாத்திரம் பண்ணிட்டோம், கொஞ்ச நாள் அதெல்லாம் விட்டுட்டு கமர்ஷியல் ஹீரோயின் ரோல் பண்ணலாமுன்னு இருந்தேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் கூறியுள்ளார்.
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நடித்துள்ள திரைப்படம் லக்‌ஷ்மி. நடனத்தை மையப்படுத்திய ‘லக்ஷ்மி' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகிறது. பிரபுதேவா உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பேபி’ தித்யா முன்னணி கதாபாத்திலும் கோவை சரளா, கருணாகரன் எனப் பலரும் துணைக் கதாபாத்திரத்தில்ல் நடித்துள்ளனர். நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது:-
ஐஸ்வர்யா ராஜேஸ்
“பல படங்களில் அம்மா கதாபாத்திரம் பண்ணிட்டோம், கொஞ்ச நாள் அதெல்லாம் விட்டுட்டு கமர்ஷியல் ஹீரோயின் ரோல் பண்ணலாம்னு தான் இருந்தேன். தயக்கத்தோடு தான் விஜய் சார் கிட்டக் கதை கேட்டேன். ஆனா கதை கேட்டதும் பிடிச்சது ஒத்துக்கிட்டேன். பிரபு தேவா சார் ஒரு லெஜெண்ட். அவரோடு நடிக்கிறது ரொம்ப பெருமையா இருந்தது. நடிகர், நடன இயக்குநர் எல்லாத்தையும் தாண்டி அவரிடம் நல்ல நகைச்சுவை உணர்வு இருந்தது. லக்ஷ்மி படத்தில் வேலைச் செஞ்ச எல்லாக் குழந்தைகளும் மிகவும் திறமைசாலிகள். படம் கண்டிப்பா குழந்தைகளுக்கு ஒரு இன்ஸ்பிரேஷ்னா இருக்கும்”
நடிகர் பிரபுதேவா
“கதை சொல்லுறதுக்கு முன்னாடி விஜய் ஒரு டான்ஸ் படம் பண்ணலாம்னு ஐடியா சொன்னார். ‘பண்ணா இந்தியா அளவுல பண்ணலாமுன்னு சொன்னேன்’ அதுக்கு ஏத்த மாதிரி கதையும் அமைஞ்சிருக்கு. ஏ.எல். விஜய் எடுத்த பெஸ்ட் படம் இதுதான். நல்ல படங்கள் நிறையப் பண்ணிருந்தாலும் இது தான் ஒரு இயக்குநருடைய படமாக இருந்தது. இந்தியா முழுவதும் டான்ஸ் நிகழ்ச்சிகளில் பெர்ஃபார்ம் பண்ண குழந்தைகளில் இருந்து தேர்ந்தெடுத்து இந்த படத்தில் நடிக்க வச்சிருக்கோம். டான்ஸ் மட்டுமல்ல பல இடங்களில் அழவும் வச்சிருக்காங்க. நிச்சயமா இந்த படம் உங்களுக்குப் பிடிக்கும் ஜாலியாக இருக்கும்”
இயக்குநர் விஜய்
“தேவி படம் பண்ணிட்டு இருக்கும்போது தான் இந்த படத்தைப் பற்றி யோசனை வந்தது. பிரபு சார் தான் இந்த படத்துக்கு பக்க பலமாக இருந்தது. நடிக்கிறதோடு மட்டுமில்லாமல் படம் முடியற வரை செட்ல இருந்து உற்சாகப்படுத்திட்டே இருப்பாரு. ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்துல அவங்களுக்கு டான்ஸ் ஃபோர்ஷன் இல்லைனாலும், அவங்களுக்கும் தித்யாவுக்குமான பாண்ட் அற்புதமா இருந்தது. தித்யாவும் மத்த எல்லா குழந்தைகளுமே நல்ல ஃபெர்பார்ம் பண்ணிருக்காங்க. டான்ஸ் படத்துக்கு மியூசிக் ரொம்ப முக்கியம். சாம் சிறப்பா இசை அமைச்சிருக்கார். படம் நிச்சயம் ஒரு நல்ல டான்ஸ் மூவியா இருக்கும்”

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.