வவுனியாவின் வீதி விபத்தை தடுப்பது எப்படி?

இன்று காலையிலும் குருமன் காட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், ஒரு மோட்டார் சைக்கிள் வீதி விபத்து நடந்ததாக சொன்னார்கள்.
வவுனியாவிலுள்ள இளைஞர்கள் பலர், இன்று அதிவேகத்தில் தமது மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதனால் வீதி விபத்துக்கள் ஏற்பட்டுவருகின்றன.
குறிப்பாக, புகையிரத நிலைய வீதியானது மக்களால் அதிகமாக பாவிக்கப்படும் சனநெரிசல் மிக்க காபெற் வீதியாகும்.
இவ்வீதியில் இளைஞர்கள் 100Km/h, 120km/h எனும் அதி வேகத்தில் மோட்டார் சைக்கிளில் பறக்கின்றார்கள்.
இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால், இவ் இளைஞர்களுக்கும், வீதியால் பயணிக்கும் பயணிகளுக்கும்
தொடர் விபத்துக்கள் ஏற்பட்டவண்ணம் இருந்துவருகிறது, என்பதை எண்ணி மக்கள் அச்சப்படுகிறார்கள்.
அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்களை பொலிஸ் பிரிவினர் தடுத்து நிறுத்தி,
ஆகக் குறைந்தது 2 மணிநேரம்,
அருகில் உள்ள குப்பை கூழங்களை அகற்றி சுத்தமாக்க்க வேண்டும்,
இப் புதிய நடைமுறையை கொண்டு வரவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
உரியவர்கள், இதனை சட்ட ரீதியானதாக ஆக்குவதற்கு நீதிமன்றன்தின் உரிய அனுமதியை கோரி பெற்றால்,
வவுனியா நகரம் குப்பை கூழங்கள் இன்றி அழகாக காட்சி தருமல்லவா....!
ஜெகதல பிரதாபன்.

No comments

Powered by Blogger.