மனைவியைக் கொலை செய்து- ஆற்றில் வீசிய கணவன் கைது!

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்து, சடலத்தை ஆற்றில் வீசிய கணவன், சுமார் ஒன்றரை மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பொலன்னறுவை நிசங்க மல்லபுர பகுதியில் நடந்துள்ளது.

சுமார் ஒன்றரை மாதங்களாகக் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் ஆசிரியை ஒருவரே சடலமாக மீட்கப்பட்டார்.

36 வயதுடைய குறித்த ஆசிரியையை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காணவில்லை என்று கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும் கணவர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளில் சிக்கிய நபர், தனது மனைவியை தானே கொலை செய்து ஆற்றில் வீசியதை ஒப்புக் கொண்டார்.

No comments

Powered by Blogger.