புர்காவுடன் சென்ற பெண்ணுக்கு பொலிஸில் 121 பவுன் தண்டம்!

டென்மார்க் நாட்டில் சுற்றுலாப் பயணியாகச் சென்ற துருக்கி பெண் ஒருவர் வீசாவைப் புதுப்பித்துக் கொள்வதற்கு
முஸ்லிம் பெண்கள் சிலர் அணியும் புர்கா ஆடையுடன் டென்மார்க் பொலிஸுக்குச் சென்றபோது பொலிஸாரினால் அப்பெண்ணுக்கு 121 பவுன் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.
தமது நாட்டில் புர்கா ஆடை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாடை இன்றியே பொலிஸுக்கு வருகை தர வேண்டும் எனவும் பொலிஸார் அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளனர்.
பிரசித்தமான இடங்களில் புர்கா அணிவரை பிரான்சு, ஜேர்மன் மற்றும் ஒஸ்ட்றியா போன்ற நாடுகிளில் ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதேவேளை, புர்கா அணிவது கூடாது எனத் தடை விதிப்பது பெண்களுக்கு செய்யும் துஷ்பிரயோகமாகும் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.