162 கிமீ வேகத்தில் சீனாவை சூறையாடும் மங்குட் புயல் !

பிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் தீவில் ‘மங்குட்’
என் பெயரிடப்பட்ட புயல் நேற்று கடுமையாக தாக்கியது. அங்கு பக்காயோ என்ற இடத்தில் இன்று கரையை கடந்தது.
புயல் காரணமாக மணிக்கு 305 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதில், இரண்டு மீட்புப்படை வீரர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் கடற்பரப்பை கடந்த மங்குட் புயல், தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகணத்தை நோக்கி நகர்ந்தது. இதனால் பெய்த கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குவாங்டாங் மாகணத்தில் உள்ள ஜிங்மன் கடற்பகுதியில் சுமார் 162 கிமீ வேகத்தில் காற்று வீசியது.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள 25 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.  மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 48 ஆயிரம் படகுகள் உடனடியாக கரை திரும்பிவிட்டன. வெளியேற்றப்பட்ட மக்களுக்காக 3 ஆயிரத்து 777 அவசர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
புயலினால் கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புக்களை தொடர்ந்து ராணுவம் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளுக்காக அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.