7 பேரை விடுதலை தொடர்பில் ஆளுனர் – உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை!

இந்திய முன்னாள் ஜனாதிபதி ரஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை
விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்துள்ளார்.

7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை ஆளுனருக்கு பரிந்துரை செய்தமை தொடர்பாக முடிவெடுக்க ஆளுனர் பன்வாரிலால் புரோகித் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பன்வாரிலால் புரோகித் அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

No comments

Powered by Blogger.