கடனுக்காக சிறுநீரகத்தை விற்கும் ஈழப்பெண்கள்!

ஈழப்போருக்கு பின்னர் விதவையாக்கப்பட்ட பெண்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக தங்களது சிறுநீரகத்தை விற்பதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று ஐநாவின் நிபுணர் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் சுயேட்சையான நிபுணர் ஜீயான் பாப்லோ போகோஸ்லேவ்ஸ்கி சமீபத்தில் இலங்கைக்கு சென்று வந்தார். அவர் ஐநாவிற்கு சென்ற பின்னர் அறி்க்கை ஒன்றை பத்திரிகையாளர்களுக்கு வெளியி்ட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசப்படைகளுக்கும் நடந்த இறுதிப்போருக்கு பின்னர் ஏராளமான பெண்கள் கணவரை இழந்து விதவையாகினர். இவர்களில் பலர் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கியுள்ளனர். இக்கடன்களை அடைப்பதற்காக இந்த பெண்கள் தங்களது சிறுநீரகத்தை விற்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

கந்து வட்டிக்காரர்களிடம் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கும் உளவியல்ரீதியான சி்த்ரவதைகளுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

இலங்கையில் 37 ஆண்டுகளாக நடந்து வந்த போர்களில் பல ஆயிரம் பெண்கள் விதவையாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுய உதவிக்குழுக்கள் என்ற பெயரில் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கியுள்ளனர் அதை திரும்பித்தர எண்ணற்ற வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.