ஜனாதிபதயின் எழுத்து மூல வாக்கு எம்மிடம் உள்ளது – அத்துரலிய ரத்ன தேரர்!

ரணில் விக்ரமசிங்கவின் அபிலாஷைகளையே மக்கள் விடுதலை முன்னணி 20 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக
நிறைவேற்ற முயற்சிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டு ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக இல்லாமல் செய்தால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாரிய சவாலாக மாறுகின்றது. பொதுஜன வாக்கெடுப்புக்கு விடப்படும் எந்தவொரு அரசியல்யாப்பு மாற்றத்தையும் மேற்கொள்வதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே மக்களுக்கு வாக்களித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை மாற்றுவதில்லையென்ற உறுதிமொழியை தமக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலம் வழங்கியுள்ளதாகவும் ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் யாப்பு மாற்றமொன்றைக் கொண்டுவந்து புரட்சியை ஏற்படுத்தலாம் என அரச சார்பற்ற நிறுவனங்கள் கனவு காண்பதாகவும் தேசிய சகோதார மொழி ஊடகமொன்றுக்கு தேரர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.