30ஆவது மகாவலி விளையாட்டு விழா இன்று ஆரம்பம்!

மகாவலி வலய விவசாயக் குடும்பங்களின் பிள்ளைகளது விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்தி சர்வதேசம் வரை கொண்டு செல்லும் நோக்கில்
வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மகாவலி விளையாட்டு விழா 30ஆவது முறையாகவும் இன்று எம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
“தன்னிறைவுமிக்க யுகம் – மகாவலி இளம் சமுதாயத்திற்கு உயரிய மதிப்பு” என்ற தொனிப்பொருளின் கீழ் இம்மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இவ்வருட விளையாட்டு விழாவில், 10 மகாவலி வலயங்களையும் சேர்ந்த சுமார் 3,000 விளையாட்டு வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளதுடன், தேசிய மட்டத்தில் இடம்பெறும் 42 போட்டி நிகழ்வுகள் இதில் இடம்பெறவுள்ளன.
அதன் ஆரம்ப விழாவானது மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க மற்றும் மகாவலி பணிப்பாளர் நாயகம் சரத் சந்திரசிறி விதான ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், நிறைவு விழா நாளை பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

No comments

Powered by Blogger.