திருமணத்துக்கு விண்ணப்பித்த திருநங்கை அதிகாரி!

தன் பாலின ஈர்ப்பு குற்றமல்ல என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, ஒடிசா மாநில திருநங்கை அதிகாரி தனது
திருமணத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் நிதித் துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஐஸ்வர்யா ருதுபர்ணா பிரதான்(34). திருநங்கையான இவர், தன்னை ஆண் என்பதிலிருந்து மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்குமாறு அரசுக்கு விண்ணப்பித்திருந்தார். 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் திருநங்கைகளை, மூன்றாம் பாலினமாக அங்கீகரித்தது.
ஒடிசா மாநிலத்தில் தென்கானல் என்னும் இடத்தில் மாஸ் கம்யூனிகேஷன் படித்தார். 2010 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தன் பாலின குறைபாடு காரணமாக பலராலும் கிண்டலுக்கு ஆளான இவர், கல்லூரி காலத்தில் பலமுறை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் , இந்த கஷ்டங்களினால் என்னுடைய படிப்பை நான் விடவில்லை என்கிறார்.
தன்னுடைய சொந்த வாழ்வை மறைக்காத ஐஸ்வர்யா, 2016 ஆம் ஆண்டு, தன்னுடைய ஆண் நண்பரை சந்தித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நண்பரோடு வாழ்ந்து வருகிறார். தற்போது அவரையே திருமணம் செய்து கொள்ள விண்ணப்பம் அளித்துள்ளார். அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார். சட்டம் அனுமதித்தால், ஒரு குழந்தையை தத்தெடுக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு தன்னைப் போன்றோருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.