பாராளுமன்ற விசேட கூட்டங்களில் கலந்துகொள்ள ஊடகங்களுக்கு அனுமதி?

அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற விசாரணைக்குழு (கோப்) உட்பட பாராளுமன்றத்தில் இடம்பெறும் விசேட கூட்டங்களுக்கு விரைவில்
ஊடகவியலாளர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற குழுக்களின் தகவல்களை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் வழங்குவதற்கு தனியான தகவல் அதிகாரியொருவரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான தேவையான சட்ட ஒழுங்குகளை தயாரிப்பதற்கு பாராளுமன்ற சட்டங்கள் மற்றும் சலுகைகள் தொடர்பான சட்ட மூலம் மறுசீரமைப்புச் செய்யயப்படவுள்ளது. இந்த சட்ட மூலம் தயாரிப்பதற்கு சட்டவாக்கத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்
Powered by Blogger.