வாள்வெட்டு குழு உறுப்பினர் சிகிச்சை பலனின்றி மரணம்!

புதுக்குடியிருப்பு- கைவேலி பகுதியில் வீடு புகுந்து வாள்வெட்டு நடாத்த முயன்றபோது வீட்டின் உரிமையாளரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த வாள்வெட்டு குழுவை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

காதல் விவகாரம் தொடர்பில் புதுக்குடியிருப்பை சேர்ந்த இளைஞர் குழு ஒன்று கைவேலி பகுதியில் உள்ள ஒருவீட்டுக்கு வாள்களுடன் சென்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

அந்த தாக்குதலில் ஈடுபட சென்ற இளைஞர்குழுவினை சேர்ந்த இளைஞர்களில் ஒருவர் குறித்த வீட் டாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் அனுப்பி வைக்கப்ட்ட நிலையில் இன்றுகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு 4ஆம் வட்டாரம் கோபாவில் பகுதியை சேர்ந்த திருச்செல்வம் கபிலன் என்னும் பல்கலைக்கழகம் தெரிவாகி கல்வி நடவடிக்கையை இடைநிறுத்திக்கொண்ட இளைஞரே பலியாகியுள்ளார்.

இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பலர் கைதுசெய்யப்ட்டுள்ளதோடு புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

#Puthukkudiyiruppu  #jaffna  #srilanka  #tamilnews  

No comments

Powered by Blogger.