சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வெடிப்பு!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞான பீட ஆய்வு கூடத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று மாலை நான்கு மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதோடு, காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைகளுக்காக பலாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆய்வு கூடத்தில் உள்ள இரசாயனத்தால் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

21 மற்றும் 23 வயதான மாணவர்களே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
#Sabaragamuwa   #tamilnew    #srilanka  

No comments

Powered by Blogger.