புனிதமான நாளில் த.தே.ம.முன்னணி வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு!

புனிதமான நாளில் வவுனியா வடக்கு காஞ்சூரமோட்டை பூர்விக நிலத்தில் மீளக்குடியேறிய மக்களுக்கான அத்தியாவசியப்பொருட்கள் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் மனிதாபிமானப்பிரிவால் வழங்கப்பட்டது.

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் அமரர் கெங்காம்பிகை  ஞாபகார்த்தமாக ஜேர்மன் தலைநகரில் வசிக்கும் அவரது மகனான திரு.சிறீஸ்கந்தராஜா மருமகள் ரதி சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் இவ் உதவித்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் வவுனியா வடக்கு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் திரு.சஞ்சுதன்,திரு.விஜிகரன்,திருமதி.சிவரஞ்சினி, வவுனியா வடக்கு செயற்பாட்டாளர்கள் திரு.சுதன், மருதோடைச்செயற்பாட்டாளர் ஆதி அண்ணை,கிளி மாவட்டச்செயலாளர் திரு.விமல், முன்னணியின் செயற்பாட்டாளர்கள் திரு.முரளி, திரு.தர்சன்,திரு.கபில்தேவ்  ஆகியோருடன் மருதோடை கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் திரு. மதன்,கமக்கார அமைப்பின் தலைவர் திரு.ரகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

No comments

Powered by Blogger.