மீனவர்களின் வாடிகள் த.தே.ம.முன்னணி ஒழுங்கமைப்பில் மீளமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.!

புலம்பெயர் உறவுகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படுகின்ற தாயக மக்களிற்கான உதவிகளிற்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கையில்
நல்லாட்சி அரசம் மும்முரமாக களமிறங்கியுள்ளது.அவ்வாறு உதவிகளில் பங்கெடுக்கும் தரப்புக்களிற்கு தலையிடி கொடுக்கும் நடவடிக்கைகளில் அரச முகவர்கள் மும்முரமாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் சட்டவிரோத சிங்கள குடியேற்றவாசிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட தமிழ் மீனவர்களின் வாடிகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் அணியினரின் ஒழுங்கமைப்பில் தியாகி அறக்கொடை நிறுவனம் மற்றும் மனித நேய செயற்பாட்டாளர்களின் உதவியுடன் மீளமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், புதுக்குடியிருப்பு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தம்பிஐயா, முல்லை மாவட்டச் செயலாளரும் இளைஞர் அணியின் மத்திய குழு உறுப்பினருமான திலகநாதன் கிந்துஜன், முல்லைமாவட்ட அமைப்பாளர், இளைஞர் அணிச்செயற்பாட்டாளர் விஸ்ணு மற்றும் முன்னணியின் முல்லைச்செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். 

No comments

Powered by Blogger.