வாழு...வாழவிடு: தனஞ்செயன்!

"வாழு...வாழவிடு என்று திரைத்துறையில் பலரும் பேசுகிறார்கள். ஆனால், சிலரே பின்பற்றுகிறார்கள்" என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பவன்குமார் இயக்கத்தில் சமந்தா, ஆதி, பூமிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் யூ டர்ன். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைத் தயாரிப்பாளர் தனஞ்செயன் கைப்பற்றி வெளியிட்டுள்ளார். ஆனால், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சீமராஜா’ படத்துக்கு அதிகமான திரையரங்குகள் கொடுக்கப்பட்டு, யூ டர்ன் படத்துக்கு குறைவாகக் கிடைத்திருப்பதாக தெரிகிறது.

இது குறித்து தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு பெரிய படம் மட்டுமே ரிலீஸ் ஆகும் இந்த வாரம், இன்னொரு ஓரளவு எதிர்பார்ப்பு உள்ள சிறிய பட்ஜெட் படத்திற்கு மல்டி பிளக்ஸில் ஷோ வாங்க கஷ்டமாக இருக்கு. இந்த லட்சணத்தில் செப்டம்பர் 21, 28 தேதிகளில் பெரிய படங்களுடன், வரவிருக்கும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஷோ எப்படி கிடைக்கப் போகுது? தெரிலே!” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “தமிழகம் முழுவதும் 193 திரையரங்குகளில், ‘யூ டர்ன்’ வெளியாகியுள்ளது. KDM அனுப்பப்பட்டுவிட்டது. இன்று மேலும் சில திரையரங்குகள் அதிகரிக்கும் என நம்புகிறேன். நல்ல ரிலீஸ்தான் என்றாலும், இன்னும் திரையரங்குகள் அதிகரித்திருக்க வேண்டும். நல்ல கதைக்களங்கள் எப்போதுமே காட்சிகளையும், திரையரங்குகளையும் அதிகரிக்கும்.

“வாழு...வாழவிடு என்று திரைத்துறையில் பலரும் பேசுகிறார்கள். ஆனால், சிலரே பின்பற்றுகிறார்கள். எனது படம் மட்டுமே திரைக்கு வந்து வெற்றி பெற வேண்டும் என்று பலரும் நினைப்பதுதான் பிரச்சினை. இது சோகம் கலந்த உண்மை” என்று தெரிவித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் பொறுப்பேற்றவுடன், பட வெளியீடு குறித்து பல்வேறு விதிகளைக் கொண்டு வந்தார். 300 திரையரங்குகளில் மட்டுமே பெரிய படம் வெளியாகவேண்டும். மீதமுள்ள திரையரங்குகளில் சிறுபடங்கள் வெளியாகும் என்று பேசினார். ஆனால், சமீபகாலமாக இந்த விஷயம் காற்றில் பறக்கவிட்டதாகக் கருதப்படு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.