தீயாகிப் போன திருவிளக்கு .!

ஊரெழுவில் பூத்தகொடி
வேரிழந்து போனது
பாரத்தின் வஞ்சகத்தில்
தானுருகித்  தவித்தது.
நல்லூரின் வீதியெங்கும்
நாவறண்டு கிடந்தது.
நமக்காக ஒருபிள்ளை
துடிதுடித்து வாடியது..

திலீபன் மூட்டிய தீயில்
தேகமது கருகியது
திக்கெட்டும் அழுகுரலோடு
மொட்டொன்று கருகியது.
தேசத்தைக் காத்திடவே
தீப்பிளம்பான சுடரொன்று .
ஈழத்தை காத்திடவே
தாகத்தில் தவித்தது...

பசியோடு ஒருபிள்ளை
உயிரோடு போராட.
பார்த்திருந்தோமே
பார்த்தீபன் விழிகளை.
காத்திடத்தான் வேண்டி
கந்தனவன் காலடியில்.

**ஈழவன் தாசன்**
ஈழம் ...
Powered by Blogger.