அமெரிக்காவில் நீடிக்கும் சூறாவளி!- ஐவர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் கிழக்குக் கரையோரத்தை தாக்கிவரும் புளோரன்ஸ் சூறாவளியில் சிக்கி
ஐவர் உயிரிழந்துள்ளனர்.
மரங்கள் வேருடன் சரிந்து வீடுகளின் மேல் வீழ்ந்ததில் ஐவர் உயிரிழந்ததுடன், பலர்  படுகாயமடைந்தள்ளதாக அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளனர்.
கடந்த நாட்களாக அமெரிக்காவின் கிழக்கு பகுதியிலுள்ள கரோலினாஸ் பிராந்தியத்தின் கரையோரப் பகுதியில் புளோரன்ஸ் சூறாவளி ஓயாமல் தாக்கிவருகின்றது.
குறித்த சூறாவளி மேலும் ஆபத்து நிறைந்த வகையில் எதிர்வரும் நாட்களில் மணித்தியாலத்திற்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளதாக சூறாவளி கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த அசாதாரண சூழல் இன்னும் சில நாட்களில் மேலும் மோசமான முறையில் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் மேலும் அச்சத்தில் உள்ளனர்.
குறித்த பகுதியிலிருந்து 1.7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வெளியேறியுள்ளனர். மேலும் அப்பகுதிக்கு சிறிது அப்பால் அமைந்துள்ள குடியிருப்பாளர்களும் மீட்புப் பணியினரின் உதவியுடன் தங்கள் குடியிருப்பிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.