இந்திய மனித உரிமை மீறல்கள்: ஐநா கண்டனம்!

இந்தியாவில் செயல்படும் மனித உரிமை காப்பாளர்களை தொடர்ந்து அடக்குமுறைகள் வழக்குகள் மூலம் துன்புறுத்தி வருவதாக இந்திய அரசுக்கு ஐநாவின் மனித உரிமைக்கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐநாவின் பொதுச்செயலாளர் அந்தோணி கட்ரஸ் இன்று (செப்-16) பத்திரிகையாளர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஐநாவிடம் இணைந்து செயல்படும மனித உரிமைக்காப்பாளர்களை துன்புறுத்துதிலும் அச்சுறுத்துவதிலும் ஈடுபடுவதாக 38 நாடுகள் உள்ளன. இவற்றுள் இந்தியாவும் உள்ளது எனத்தெரிவி்த்துள்ளார்.
மனித உரிமைக்காப்பாளர்கள் குறித்து 2010இல் ஐநா தீர்மானம் இயற்றியது. 2010லிருந்து இதுவரை மனித உரிமைக் காப்பாளர்கள் குறித்து 9 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் வெளியிடப்பட்டுள்ள ஒன்பது அறிக்கைகளில் இந்தியா 5 அறிக்கைகளில் இடம் பெற்றுள்ளது. இந்த அறிக்கைகளி்ல் மனித உரிமைகளுக்காக செயல்படும் 5 அரசு சாரா நிறுவனங்களின் லைசன்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மதுரையில் செயல்படும் மக்கள் கண்காணிப்பகம் உள்ளிட்ட 5 அரசு சாரா நிறுவனங்கள் ஐநாவிடன் இணைந்து செயல்படுவதால் அவை சிபிஐயின் கண்காணிப்பில் உள்ளன.மொத்தம் 5 நிறுவனங்களில் 3 நிறுவனங்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்ட விபரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதில் ஹென்றி டிபேன் தலைமையில் செயல்படும் மக்கள் கண்காணிப்பகம் வெளிநாட்டு நிதி பெற்று, இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், இந்தியாவி்ல் மனித உரிமைகள் மோசமான நிலையில் உள்ளதாக சித்தரித்ததாகவும் அந்த நிறுவனத்தின் லைசன்ஸ் 2016இல் ரத்து செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.மனித உரிமைக்காப்பாளர் என்ற முறையில் ஹென்றி டிபேன் இதை ஐநாவின் மனித உரிமைகளுக்கான சிறப்பு செய்தியாளர்களிடம் புகார் அளித்தார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இது குறித்து மத்திய அரசு, வழக்கு நீதிமன்றத்தி்ல் இருப்பதால் பதிலளிக்க முடியாது என்று கூறி விட்டது.
இதே போன்று குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடந்த மதக்கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி போராடி வரும் டீஸ்டா செதல்வாத்தின் அரசு சாரா நிறுவனத்தின் லைசன்சையும் ரத்து செய்து அவரது வங்கிக்கணக்கையும் முடக்கி விட்டது.
மேகாலயாவில் யுரேனியம் கொட்டப்பட்டு வருவதால் அங்குள்ள பழங்குடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அதை எதிர்த்து போராடி வந்த சிஎஸ்டி என்ற அரசு சாரா நிறுவனத்தின் லைசன்சை ரத்து செய்து வங்கிக் கணக்கையும் முடக்கியுள்ளது.
இந்த நிறுவனங்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக இந்திய அரசு மீது, ஐநா குற்றம் சாட்டியுள்ளது

No comments

Powered by Blogger.