பாதாள உலககுழுவினருக்கும் பொலிஸாருக்கு தொடர்பு – விசாரணை செய்ய கோரிக்கை

பாதாள உலககுழு உறுப்பினர்களுடன் பொலிஸ்
உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பில் சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார வௌியிட்ட தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் கூறினார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
அது மிகவும் பாரதூரமான தொலைபேசி உரையாடல். இது உண்மையாக இருந்தால் கட்டாயம் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும்.
அந்த தொலைபேசி உரையாடலில் மதூஷ் தொடர்பில் பேசப்படுகின்றது, பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர்களுடன் தொடர்பு இருந்தால் அதுதொடர்பில் குழுவொன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்“ என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.