நாட்டை பிரித்து சமஷ்டியை வழங்க முடியாது: மஹிந்த

நாட்டை பிரித்து சமஷ்டியை வழங்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த அவர், அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வி ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை வழங்கவேண்டும். எனினும் இலங்கை ஒரு சிறிய நாடு. அந்நாட்டை பிரித்து சமஷ்டியை வழங்க முடியாது. அதற்கான சாத்தியம் இல்லை.
துரதிஷ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் என்னிடம் வந்து இது குறித்து பேச தயாராகவில்லை.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு சிறந்த தீர்வை வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.