பன்னாட்டு கரையோர தூய்மைப்படுத்தல் தின நிகழ்வு !

பன்னாட்டு கரையோர தூய்மைப்படுத்தல் தினத்தையொட்டி ஏற்பாடு
செய்யப்பட்ட கரையோர தூய்மைப்படுத்தல் தின தேசிய நிகழ்வு நேற்று காலி தடல்ல கடற்கரையில் இடம்பெற்றதுஅ
ரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய தேசிய கரையோர தூய்மைப்படுத்தல் மற்றும் கடல்சார் வளங்களின் பாதுகாப்பு வாரமும் இதனோடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

செப்டெம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை கரையோரப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படவுள்ளது.
 இந்த வாரத்தில் கடற்கரைகள் மற்றும் கடல்சார் சூழலை தூய்மைப்படுத்தும் சுமார் 100 செயற்திட்டங்கள் நாட்டை சூழவுள்ள 14 கரையோர மாவட்டங்களில் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Powered by Blogger.