கண் கலங்கிய ஸ்மிரிதி இரானி!

அமைச்சரும் முன்னாள் டிவி நடிகையுமான ஸ்மிரிதி இரானி நிகழ்ச்சி ஒன்றிற்கான புரொமோவில் கண்கலங்கியுள்ளார்.
மாடலிங் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் வாயிலாக பிரபலமடைந்து அரசியலில் களமிறங்கியவர் ஸ்மிரிதி இரானி. வெற்றிகரமான டிவி நடிகையான அவர் தற்போது அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள ஏக் தா கபூரின் ‘ஹோம்’ எனும் வெப் சீரிஸுக்கான புரொமோஷனில் கலந்துகொண்டுள்ளார் ஸ்மிரிதி.
அதன்படி, தான் வாழ்ந்த முதல் வீட்டுக்கு 35 ஆண்டுகளுக்கு பின்னர் சென்றிருக்கிறார் ஸ்மிருதி. அங்கு சென்ற அவர் கடந்த கால நண்பர்களைச் சந்தித்து உரையாடியதுடன் அங்குள்ள கடைகளிலும் உணவருந்தியுள்ளார். மேலும் அங்குள்ள ரிக்‌ஷாவிலும் பயணம் செய்துள்ளார். தான் வசித்த பகுதிகள் தற்போது கடைகளாக மாறியுள்ளதை வருத்தத்தோடு பார்த்துள்ளார்.
Powered by Blogger.