சுன்னாகத்தில் வாள்வெட்டுக் கும்பல் நள்ளிரவில் அட்டகாசம்!

சுன்னாகம் - ஐயனார் கோவில் பகுதியில், இன்று அதிகாலை நேரத்தில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்துச் சேதம் விளைத்து விட்டுத் தப்பிச் சென்றது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில், ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 12.15 மணியளவில், மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட குழுவொன்று, வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பொருட்களை அடித்து நொருக்கியது.

இதன்போது, வீட்டில் இருந்த பெண்கள் இருவர், அங்கிருந்து தப்பிச் சென்று, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.