கொழும்பில் துப்பாக்கி சூடு: இளைஞன் ஒருவர் படுகாயம்!

மாளிகாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்தார்.

இந்நிலையில் குறித்த இளைஞரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.