யாழில் பெண் உத்தியோகத்தர் எதிர்நோக்கிய மோசமான சம்பவம்!

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கடமையாற்றும் பெண்ணொருவரின் பல இலட்சம் ரூபா பெறுமதியான தாலிக்கொடி நேற்று(12)
பட்டப்பகல் வேளையில் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேற்படி கலாசாலையில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றும் குறித்த பெண் உத்தியோகத்தர் கடமைக்குச் சென்று கொண்டிருந்த போது அவரின் பின்பக்கமாக மோட்டார்ச் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் கலாசாலைக்கு மிக அருகில் வைத்து அவரது தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர். ஏழு பவுண் தாலிக்கொடியே இவ்வாறு பறிபோயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
#jaffna  #koppay   #srilanka   #tamilnews
Powered by Blogger.