மீண்டும் ரஜினியுடன் இணைந்த ஐஸ்வர்யா ராய்!

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதன் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.

இந்த படம் நவம்பர் 29 ந்தேதி வெளியாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கபட்டு உள்ளது. இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் உருவாகும் படம் இது. சுமார் ரூ.543 கோடி செலவில் 2.0 படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் தனது தமிழ் திரைப்பட அறிமுகத்தை மெகா பட்ஜெட்டில் தொடங்கி உள்ளார். இதில், அவர் வில்லன் வேடத்தில் நடித்தார். இந்த படம் வெளியாக 2 மாதங்கள் இருக்கும் நிலையில் படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான செய்தி வெளிவந்து உள்ளது.

பாலிவுட் லைப் இணைய தளம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது:-

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யாராய் 2010 சூப்பர் ஹிட் படமான 'எந்திரன்' படத்தில் நடித்துள்ளார், இது 2.0 இன் முன் படமாகும். ஐஸ்வர்யா ராய் உண்மையில் படத்தில் ஒரு கவுரவ தோற்றம் கொண்டால் நாம் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை.

தகவலில் ஐஸ்வர்யாராய் விஞ்ஞானியாக நடித்த ரஜினிகாந்தின் வசீகரன் பாத்திரத்துடன் உணர்ச்சித் தோற்றத்தைக் கொண்டிருப்பார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 

No comments

Powered by Blogger.