அம்பிளாந்துரை கிராமத்தில் வெள்ள நிவாரணம் உதவி

மட்டக்களப்பில் கடந்த ஒருவார காலமாக பருவ மழை கடுமையாக தொடர்ந்து பெய்து வருகின்ற இதன் காரணமாக 750 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளர். இந்தநிலையில் தென் தமிழீழம், மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தில் வாழும் 150 குடும்பங்களுக்கு டென்மார்க் உலக சிறுவர் நலன் காப்பகம் அமைப்பினர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கி உள்ளனர்.
இன்று 18/11/2018 மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேசசபைக்கு உட்பட்ட அம்பிளாந்துரை கிராமத்தில் தமிழ்த்தேசிய  மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் டென்மார்க்கை மையமாக கொண்டியங்கும்

 உலக  சிறுவர்  நலன்  காப்பகம் அமைப்பினால் 150 குடும்பங்களுக்கு
வெள்ள நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.