சிங்கத்தின் புதிய கர்ஜனை!

நடிகர் சூர்யா நடித்த சிங்கம் படம் தற்போது புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது.ஹரி இயக்க சூர்யா, அனுஷ்கா நடித்திருந்த படம் சிங்கம். 2010ஆம் ஆண்டு வந்த இந்தப் படம் பெருத்த கவனத்தைப் பெறவே, சிங்கம் -2 மற்றும் சிங்கம் -3 எனத் தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்களும் எடுக்கப்பட்டன.

தமிழில் சிங்கம் படத்திற்கான வரவேற்பைப் பார்த்து இந்தியிலும் அதை ரீமேக் செய்தனர். அந்த வகையில் நடிகர் அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்க, ரோஹித் ஷெட்டி அதை இயக்கினார். இந்தியிலும் கவனம் பெற்றதால் கன்னடம் மற்றும் பெங்காலி மொழிகளிலும்கூட சிங்கம் ரீமேக் ஆனது.

இந்நிலையில் இதை பஞ்சாபி மொழியிலும் தற்போது ரீமேக் செய்கின்றனர். அதன்படி இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. பர்மிஷ் வெர்மா இதில் கதாநாயகனாக நடிக்கும் நிலையில், நடிகை சோனம் பாஜ்வா இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.

நவானியாத் சிங் இதை இயக்குகிறார். இந்தப் படத்தை டி சீரிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்நிறுவனத்துடன் நடிகர் அஜய் தேவ்கனின், அஜய் தேவ்கன் ஃபில்ம்ஸ் நிறுவனமும் தற்போது இணைந்து இதை வெளியிடவுள்ளது.

பஞ்சாபியிலும் இந்தப் படம் கவனத்தைப் பெறும் பட்சத்தில் இன்னும் பிற மொழிகளிலும் இந்தப் படம் ரீமேக் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments

Powered by Blogger.