இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 33 அடியாக உயர்வு

1983ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாண்டிலேயே இரணைமடு குளத்தில் 33 அடிக்கு மேற்பட்ட தண்ணீர் இன்று தேக்கப்பட்டுள்ளதாகவும் குளத்தில் 36 அடி வரையான தண்ணீரை தேக்கமுடியும் என்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியிலாளர் என்.சுதாகரன் இன்று தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 36 அடியாகக்காணப்பட்ட போதும், 1984ஆம் ஆண்டு மற்றும் 1983ஆம் ஆண்டு குளத்தின் அணைக்கட்டில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 30 அடிக்கு மேலான தண்ணீரை சேமிக்க முடியாத நிலை காணப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் குளம் புனரமைக்கப்படாத நிலையில் 2014ஆம் ஆண்டு இருந்த போதும் வான்கதவுகள் திறக்கப்பட்ட போதும் 34 அடி 1 அங்குலமாக குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்பட்டாலும் 30அடி வரையான தண்ணீரே சேமிக்கப்பட்டுள்ளது.


அதாவது கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பானக் குளமான இரணைமடுக் குளம் கடந்த 1975 ஆம் ஆண்டுக்கு பின் எவ்வித பாரிய புனரமைப்பு வேலைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் காணப்பட்டுள்ளது.


கடந்த 2010ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகளின் விளைவாகவும் இரணைமடு குளத்தின் கீழான 22 கமக்கார அமைப்புக்களும் 7000திற்கு மேற்பட்ட விவசாயிகளின் இடைவிடாத கோரிக்கையையும் ஏற்று, இலங்கை அரசாங்கம் நிதி வழங்கும் நிறுவனங்களிடம் கேட்டதற்கிணங்க இப்பாரிய திட்டம் முன்னெடுக்கப்பபட்டுள்ளது.

#Tamilnews  #Tamil  #Srilanka #Irannamaddu  #Tamilarul.net #Kilinochchi
Powered by Blogger.