கால்பந்தைக் காதலிக்கும் காதலர்கள்

ஜீது ஜோசப் இயக்கத்தில் மிஸ்டர் &
மிஸர்ஸ் ரவுடி படத்தில் நடித்து வந்த காளிதாஸ் ஜெயராம் தற்போது ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஜோடியாக நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
மிதுன் மனுவேல் தாமஸ் இயக்கும் படம் ‘அர்ஜெண்டினா ஃபேன்ஸ் காட்டூர்கதவு’. கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அக்டோபர் மாதம் வெளியானது. தற்போது இதன் படப்பிடிப்பு இரிஞ்சலகுடா - காட்டூரில் நடைபெற்று வருகிறது. விபினன் என்ற கதாபாத்திரத்தில் காளிதாஸும் மெஹருனிஸா என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாவும் ஒரே கிராமத்தில் சிறு வயதிலிருந்தே நட்புடன் பழகி வருபவர்களாக நடிக்கின்றனர்.
இவர்களது நட்பும் கால்பந்து விளையாட்டு மேல் கொண்ட காதலும் திரைக்கதையின் மையமாக உள்ளது. 2010ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை நடைபெறும் மூன்று உலகக் கோப்பை கால்பந்து தொடர்கள் கதையின் பின்னணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அசோகன் சாருவில்லின் சிறுகதையைத் தழுவி அதே பெயரில் இந்தப் படம் தயாராகிறது. இதன் திரைக்கதையில் இயக்குநர் மிதுனுடன் இணைந்து ஜான் மந்த்ரிக்கல் பணியாற்றியுள்ளார். ஆஷிக் உஸ்மான் தயாரிக்கும் இந்தப் படத்தில் அந்த ஊரைச் சார்ந்தவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்

No comments

Powered by Blogger.