ஹாக்கி உலகக் கோப்பை: சீனாவை கந்தலாக்கியது ஆஸ்திரேலியா!

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் குரூப் பி-யின் முக்கியமான போட்டியில், பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணி, சீனாவை 11-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.


புவனேஸ்வரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில், குரூப் பி-யின் முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா - சீனா அணிகள் மோதின. இரண்டு போட்டிகள் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா, காலிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. அதேநேரம், அயர்லாந்து அணி 2 தோல்விகளுடன் தொடரை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுவிட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து, சீன அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற, மற்றொரு சுற்றில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.



துவக்கம் முதலே ஆஸ்திரேலிய வீரர்கள் முழு ஆதிக்கம் செலுத்தினர். அதிரடியாக விளையாடி தொடர்ந்து சீனாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். ஆஸ்திரேலிய அணியின் ப்ளேக் க்ளோவர்ஸ், 10வது, 19வது மற்றும் 34வது நிமிடங்களில் ஹேட்ட்ரிக் கோல்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணியின் டிம் பிராண்ட் இரண்டு கோல்கள் அடித்தார். பிளின், ஜேக் வெட்டன் உள்ளிட்டோர் தலா ஒரு கோல்கள் அடித்தனர்.

இறுதியில் 11-0 என்ற கோல் கணக்கில் சீனாவை அபாரமாக வீழ்த்தியது ஆஸ்திரேலியா. முன்னதாக 2010 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை ஆஸ்திரேலியா 12-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதே இதுவரை அதிக கோல்கள் அடித்த உலக சாதனையாக கருதப்படுகிறது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.