மம்மிகள் கண்டுபிடிப்பு! எகிப்தில்!!

 எகிப்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மம்மிகள் (பதப்படுத்தப்பட்ட உடல்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


எகிப்தின் டூல்மிக் (305-30 கிமு) ஆட்சிக்காலத்தில் இருந்ததாக கருதப்படும் 50 மம்மிகளே அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்களால் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எகிப்து தலைநகரான கெய்ரோவின் தெற்கே உள்ள மின்யா என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள டூனா எல்-ஜெபல் என்ற இடத்தில் 30 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மிகளில், 12 குழந்தைகளின் உடல்களும் காணப்படுகின்றமைக் கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் சில துணிகளால் மூடப்பட்டிருந்ததுடன், ஏனையவை கல் சவப்பெட்டிகளிலோ அல்லது மர பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பதப்படுத்தப்பட்ட இந்த உடல்கள் யாருடையவை என இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், இவை அக்காலகட்டத்தில் அரசின் முக்கிய பதவிகளில் இருந்தவர்களாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.