ஹசாரே கூறுகிறாா்!! எனக்கு ஏதாவது நடந்தால் காரணம் மோடி!!



நான் ஆரம்பித்துள்ள உண்ணாவிரத போராட்டத்தில் எனக்கு ஏதும் நேர்ந்தால் அதற்குப் பிரதமர் நரேந்திர மோடியே முழுக் காரணமென காந்தியவாதியான கிசான் பாபட் பாபுராவ் ஹசாரே தெரிவித்துள்ளார்.

மத்தியில் லோக்பால் சட்டத்தையும் மராட்டியத்தில் லோக்ஆயுக்தா சட்டத்தையும் அமுல்படுத்த வலியுறுத்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) 5 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஹசாரே முன்னெடுத்துள்ளார்.

உண்ணாவிரதம் குறித்து இன்று ஊடகங்களுக்கு ஹசாரே கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“லோக் ஆயுக்தா மற்றும் லோக்பால் தொடர்பாக நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வருகிறேன். மேலும்  2013 ஆம் ஆண்டு லோக் ஆயுக்தா சட்டம் இயற்றியும் இன்னும் லோக்பால் அமைக்கப்படவில்லை.

அந்தவகையில் லோக்பால் சட்டத்தில் யாரேனும் தகுந்த ஆதாரங்களுடன் முறைப்பாடு அளித்தால் நாட்டின் பிரதமரைக் கூட விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

அதேபோன்றுதான் லோக்ஆயுக்தாவிலும் முதல்வர் மற்றும் அவரின் அமைச்சர்களையும் விசாரணைக்கு உட்படுத்த முடியும்.

ஆகையால், லோக் ஆயுக்தா மற்றும் லோக்பால் சட்டத்தை அமுல்படுத்த அரசியல்வாதிகள் அஞ்சுகின்றனர்.

ஆனாலும் நான் போராட்டத்தை கைவிடபோவதில்லை. சிலவேளை எனக்கு ஏதும் நேர்ந்தால் பிரதமர் மோடி, மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும்” என ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.