பூஜை அறையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்!!

யாழ்.சுன்னாகம் கந்தரோடையில் 20 வயது இளைஞனொருவர் வீட்டின் பூஜை அறையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

சுன்னாகம் கந்தரோடை கந்தசாமி வீதியைச் சேர்ந்த நாதன் ஜசிந்தன் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.

குறித்த இளைஞர் வழமை போன்று  பூஜை அறையில் உறக்கத்துக்குச் சென்றுள்ளார். இந்நிலையில்,  காலை இளைஞனின் தாயார் பூஜை அறைக் கதவைத் திறந்து பார்த்த போது, தனது மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இளைஞன் படித்து முடித்து விட்டுக் கூலித் தொழில் செய்து வந்துள்ளார்.இதேவேளை,சம்பவத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், ஒரு வித மனவிரக்தியே தற்கொலைக்கான காரணமாகவிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

No comments

Powered by Blogger.