`என்னுடைய களம் சினிமாதான்” - வதந்திகளுக்கு மோகன்லால் விளக்கம்!

``நான் இப்போது செய்யும் பணியை விடுவதற்கு என்னால் முடியாது. அதனால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை.
அரசியல் அல்ல, சினிமாதான் என் பணிக்களம்’ என நடிகர் மோகன்லால் தெரிவித்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் நடிகர் மோகன்லால் போட்டியிடப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. மோகன்லாலை போட்டியிட வைப்பதற்காக அவரை சந்தித்துப் பேசிவருவதாக கேரள பா.ஜ.க எம்.எல்.ஏ ஓ.ராஜகோபால் கூறியிருந்தார். இந்தச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் மோகன்லால் தனியார் ஊடகத்துக்குப் பேட்டி அளித்துள்ளார். மோகன்லால் கூறுகையில், ``நிறைய பணிகள் செய்து முடிக்க வேண்டியது இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகும் எண்ணம் இல்லை.

நான்போட்டியிடப் போவதாக நிறைய தகவல்கள் வருகின்றன. நான் இப்போது செய்யும் பணியை விடுவதற்கு என்னால் முடியாது. அதனால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. சினிமாவில் இருக்கும் சுதந்திரத்தை நான் அனுபவிக்கிறேன். அரசியல் அப்படி இல்லை. மக்கள் பலர் என்னை நம்பி இருப்பார்கள். என்னுடைய களம் அரசியல் அல்ல, சினிமாதான் என் பணிக்களம்’’ என்றார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

No comments

Powered by Blogger.