சுங்க தொழிற்சங்கம் பணியிலிருந்து விலகுவதாக எச்சரிக்கை!

தமது பிரச்சினைகளுக்கு இன்றைய தினத்திற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் அத்தியாவசிய உணவுகள் மற்றும் மருந்துகளை விடுவிக்கும் பணியிலிருந்து விலகுவதாக சுங்க தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுங்க தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 7ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இந்த போராட்டத்திற்கு மதுவரித் திணைக்களத்தின் 14 தொழிற்சங்கங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.
அத்தோடு, கொள்கலன் போக்குவரத்து சங்கத்தினருடன், பதிவாளர்கள் சங்கத்தினரும் இன்று முதல் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சுங்கத் திணைக்கள பணிப்பாளராக இருந்த பி.எஸ்.எம். சார்ல்ஸ் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கையால் தாம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து புறக்கோட்டை மொத்த வியாபார நிலைய உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

No comments

Powered by Blogger.