போதைப்பொருளுடன் இந்தியர் கைது!!

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) மும்பையிலிருந்து இலங்கைக்கு வந்த, 34 வயதுடைய இந்தியரின் பயணப் பொதியிலிருந்து 1 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 01 கோடி 50 இலட்சம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.