நெஷனல் என்குவாரர் வௌியீட்டாளர் மீது அமஸோன் உரிமையாளர் குற்றச்சாட்டு!!

உலக தனவந்தர்களில் ஒருவரும் எமஸோன்.கொம் இணையத்தின் உரிமையாளருமான ஜெஃப் பெஸோஸ் தன்னை நெஷனல் என்குவாரர் சஞ்சிகையின் வௌியீட்டாளர் ஆபாசமான படங்களைக் கொண்டு அச்சுறுத்த முயன்றதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த சஞ்சிகையின் தாய் நிறுவனமான அமெரிக்கன் மீடியா இன்ங், அவருடைய தனிப்பட்ட செய்திகளை எப்படிப் பெற்றது என்பதைப் பற்றிய விசாரணைகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பெஸோஸ் மற்றும் அவரது மனைவி மெக்கென்ஸி ஆகியோர் கடந்த மாதம் விவகாரத்து பெற்றனர்.

உலக தனவந்தரின் குடும்ப வாழ்க்கை தொடர்பாக நெஷனல் என்குவாரர் சஞ்சிகை செய்தியறிக்கைகளை வௌியிடுயிடுவதற்கு முன்னரே அவர்களின் விவாகரத்து பற்றிய அறிவிப்பு வௌியாகியிருந்தது.

இந்தவிடயம் தொடர்பாக ஏனைய சர்வதேச ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமெரிக்கன் மீடியா இன்ங் பதிலளிக்கவில்லை.

எவ்வாறாயினும், தனது முன்னாள் காதலியும், முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளருமான லவ்ரென் சன்செஸ்ஸுடன் தான் மிக நெருக்கமாக தோன்றியிருந்த ஒளிப்படங்களை வௌியிடப் போவதாக அமெரிக்கன் மீடியா இன்ங் அச்சுறுத்தியதாக எமஸோன் நிறுவுனர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.