டெல்லி நட்சத்திர விடுதி தீ விபத்து!!

டெல்லியில் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.

இந்த அனர்த்தத்திற்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்ற நிலையில், தீயணைப்பு பிரிவினரும், மீட்பு பணியாளர்களும் மிகத் தீவிரமாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் நட்சத்திர விடுதியில் பயங்கர தீ விபத்து
டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் செயற்பட்டுவரும் அர்பிட் பலஸ் விடுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையிலேயே இந்த பயங்கர தீ விபத்து ஏற்றபட்டுள்ளது.

தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதியின் மேற்பகுதியில் ஏற்பட்ட தீ வேகமாக பரவி வந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.