குடியேற்றவாசிகள் அதிகாரிகளால் மீட்பு!

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ குடிவரவு அதிகாரிகள் தமது நாடுகளின் ரியோ கிரான்டே எல்லைகளுக்குள் வந்த குடியேற்றவாசிகளை மீட்டுள்ளனர்.

லோபஸ் என்பவரும் அவரது ஐந்து வயது மகனும் கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மெக்ஸிகோ எல்லைப்பகுதி அதிகாரிகள் அவர்களை மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்களுடன் வந்த பெர்ரர் என்பவர் கூறுகையில்” நாங்கள் நினைத்தோம், அனைவரும் கடலில் மூழ்கி விடுவோம் என்று” என குறிப்பிட்டார்.

இதேவேளை பிறிதொரு சிறிய குடியேற்றவாசிகளைக் கொண்ட குழுவொன்று டெக்ஸாஸ் ஈகள் பாஸ் பகுதியில் வைத்து அமெரிக்க அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்பட்டுத்தப்பட்ட நிலையிலும், எல்லையை கடந்து, சுமார் 2,000 மத்திய அமெரிக்க புலம்பெயர்ந்தோர் மெக்சிகோ நாட்டின்  பக்கத்திலுள்ள தற்காலிக குடியேற்ற தங்குமிடங்களை நோக்கி நகர்கின்றனர்.

அவர்களில் பலர் தற்காலிக குடியேற்றங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், உத்தியோகபூர்வ ஆவணங்களை பெறுவதற்காக காத்திருக்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.