ஒரு ஈழத் தமிழரை காதலித்தமைக்காக 28 வருடங்களாக சிறைக் கொடுமை!

• நளினி
ஒரு ஈழத் தமிழரை காதலித்தமைக்காக 28 வருடங்களாக சிறைக் கொடுமையை அனுபவித்து வருகிறார்.


இன்று ஆசியாவிலேயே அதிக காலம் சிறையில் வைக்கப்பட்டிருப்பவர் என்று இவர் பெயர் இடம்பெற்றுள்ளது.

“உன்னை விடுதலை செய்கிறோம். உனக்கு வேலை தருகிறோம். வசதியான வாழ்க்கை அமைத்து தருகிறோம். நீ முருகனுக்கு எதிராக சாட்சி சொல்லு” என்று கேட்டார்கள். ஆனால் தன்னை நம்பியவருக்கு ஒருபோதும் தன்னால் துரோகம் செய்ய முடியாது என்று நளினி மறுத்துவிட்டார்.

அவர் விரும்பியிருந்தால் அரசு சாட்சியாக மாறி விடுதலை பெற்றிருக்க முடியும். வசதியான வாழ்க்கையும்  அமைத்திருக்க  முடியும். ஆனால் அவரோ தன் காதலுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை.

28 வருடங்கள் கடந்து விட்டன. 15 நட்களுக்கு ஒருமுறை 15 நிமிடம் மட்டுமே கணவன் முருகனை பார்த்து பேச முடியும். ஆனாலும் அவர் முருகன் மீது கொண்ட காதல் சிறிதளவேனும் குறையவில்லை.

அதனால்தான் முருகன் உண்ணாவிரதம் இருக்கிறார் என்றவுடன் தானும் உண்ணாவிரத்தில் இருக்கிறார். முருகன் உண்ணாவிரதத்தில் இறந்தால் தானும் அப்படியே இறந்துவிட வேண்டும் என நினைக்கிறார்.

இறந்தபின் தன் உடலை முருகன் உடல் போன்று அரச பொது மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

கட்டிய கணவனுடன் சேர்ந்து வாழ முடியவில்லை. பெற்ற பிள்ளையை 25 வருடமாக பார்க்கவும் முடியவில்லை. இத்தகைய கொடுமையை வேறு எந்த பெண்ணாவது அனுபவித்திருக்க முடியுமா?

இவருடைய தந்தையார் சுகயீன முற்று இருந்தபோது 15 நாட்கள் பரோல் லீவு கேட்டார். அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி “ இவர் பரோலில் வெளியெ வந்தால் இவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திற்கு ஆபத்து என்று கூறி மறுத்துவிட்டார்.

அதன்பின்பு இவர் தந்தையார் மரணமடைந்தபோது பரோலில் வந்து சென்றார். அப்போது அமெரிக்க தூதரகத்திற்கோ அல்லது வேறு எதற்குமேபா எந்த ஆபத்தும் நேரவில்லை.

இப்பொதும் இவரை விடுதலை செய்யதால் நாட்டில் அமைதி குலைந்துவிடும் என இந்திய அரசு கூறுகிறது.

ஆனால் இவ் வழக்கில் தண்டனை பெற்ற 36 பேரில் 29 பேர் விடுதலை பெற்றுவிட்டார்கள். அதில் 4பேர் இறந்தும் விட்டார்கள். மீதி 25பேரினால் இதுவரை எந்தவித ஆபத்தும் நிகழவில்லை.

அப்படியிருக்க நளினியை விடுதலை செய்வதால் எப்படி அமைதி குலைந்துவிடும் என இந்திய அரசு வாதிடுகிறது?

தமிழக அரசே!
தமிழக மக்களின் விருப்பப்படி உடனடியாக நளினி உட்பட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.