பிலிப்பைன்ஸின் ஊடகவியலாளர் பிணையில் செல்ல அனுமதி!

பிலிப்பைன்ஸின் இணைய செய்தி நிறுவனத்தின் தலைவர் மரியா ரெஸ்ஸா கைது செய்யப்பட்ட பின்னர் சர்வதேச ரீதியாக எழுந்த கடும் கண்டனக் குரல்களை அடுத்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

புதன்கிழமை மாலை அவரது மனிலா தலைமை அலுவலகத்திலிருந்து அரச அவதூறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.  பின்னர் அவர் மறுநாள் காலை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டேயின் பணிப்புரையின் பேரின் அவதூறு குற்றச்சாட்டின் கீழ் மரியா கைது செய்யப்பட்டதை அடுத்து, பல தரப்பினரும் கண்டனங்களை வௌியிட்டு வந்தனர்.

பிலிப்பைன்ஸ் அரசாங்கம் ஊடகவியலாளர்களை நசுக்க முனைவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மரியா ரெஸ்ஸா பிலிப்பைன்ஸின் முன்னணி செய்தி இணையத்தளத்தின் விருது பெற்ற தலைமை அதிகாரியாவார்.

ஜனாதிபதி ரொட்ரிகோவின் ஆட்சியை சவாலுக்கு உட்படுத்தும் தரப்பினரை மிரட்டுவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அங்கு பரவலாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.  இந்தநிலையில், மரியா ரெஸ்ஸா கைது செய்யப்பட்டமை பிலிப்பைன்ஸில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பிலிப்பினோ தொழிலதிபர் கொலை முயற்சி, ஆட்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல முக்கிய விடயங்கள் தொடர்பாக ரெப்லர் இணையத்தளத்தில் விரிவான செய்திகள் வௌியாகியிருந்தன.

கடந்த 2012 ஆம் ஆண்டில் வௌியாகியிருந்த இந்த செய்திகள் தொடர்பாக மரியா மீது இணைய அவதூறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதன்பின்னரும் 2014 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கப்பட்ட செய்திகளை அவர் வௌியிட்டிருந்தார்.

2002 ஆம் ஆண்டு தொடக்கம் சேகரிக்கப்பட்ட புலனாய்வு தகவல்களைக் கொண்டு இந்த செய்தி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டிருந்தன. எனினும் எந்த புலனாய்வு முகவர் அமைப்பு, தகவல்களை வழங்கியது என்ற விபரங்களை ரெப்லர் இணையத்தளம் வௌியிடவில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.