நோய் தணிக்கும் இயற்கை வழிபாடும் இறைவழிபாடும் – Dr.சி.சிவன்சுதன் பொது வைத்திய நிபுணர்


இயற்கையை இறைவனாகச் சித்திரித்து வழிபடும் மரபு எம்மக்களிடையே அன்று தொட்டு இருந்து வருகிறது.

இவ்வாறான இறைவழிபாடு மனிதனின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கிறது என்பதற்கான பல சான்றுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.

இறைவனையும் இயற்கையையும் பக்தியுடன் மனமுருகி,மனம் ஒருமித்து தியானித்து வழிபடும் முறை அன்று தொட்டு எல்லா மதங்களிலுமே பின்பற்றப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் பல தீமைகள் நீங்கும்.நாம் காப்பாற்றப்படுவோம். சுகம் பெறுவோம், பல நல்ல விடயங்கள் நடைபெறும், மனம் சாந்திபெறும் என்ற நம்பிக்கை மதநம்பிக்கை உடைய அனைவரது மனங்களிலும் குடிகொண்டிருக்கிறது.

இவை உண்மைதான் என்ற கேள்வியும் பலரது மனங்களிலே எழத்தான் செய்கிறது.ஆனால் இவை உண்மை என ஆராய்ச்சிகள் நிரூபித்து வருகின்றன. மனம் ஒருமித்து மனமுருகி, தியானித்து வணங்குவது என்பது Meditation, Relaxation சுவாசப் பயிற்சி என்ற மருத்துவவிஞ்ஞானப் பதங்களுக்குள் அடங்குகிறது.
இவற்றால் ஏற்படும் அனுகூலங்கள் பல. இவற்றை ஒழுங்காகச் செய்து வந்தால் மனப்பாரம் குறைவதுடன் பல கொடிய நோய்களிலிருந்து நாம் காப்பாற்றப்படுவதுடன் உடலில் நல்ல பல மாற்றங்கள் நடப்பதற்கும் இது வழிகோலும் என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் சூரிய நமஸ்காரம் உடலின் விற்றமின் D தொகுப்பை அதிகரித்து உடலை காப்பது
உறுதி  செய்யப்பட்டிருக்கிறது.மதவழிபாட்டு முறைகள் மனிதனை உடற்பலமும் ஆன்மீக பலமும் பொருந்தியவனாக ஒரு முழுமையான ஆரோக்கியமுள்ள மனிதனாக வாழ்வதற்கு வழிசமைத்து நிற்கின்றது.
ஒழுங்கான அமைதியான இறைவழிபாடு மன அழுத்தம், உயர்குருதி அமுக்கம், மாரடைப்பு,பாரிசவாதம், மனச்சோர்வு போன்ற நோய் நிலைகளை தணிக்க உறுதுணையாக அமைவதுடன் எமது என்புத்தொகுதி பலம்பெறவும் வழிவகுக்கின்றது.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.