இலங்கையிடம் மனித உரிமைகளை -அமெரிக்கா வலியுறுத்தக் கூடாது!

இலங்­கை­யில் பணி­யாற்­றும் போது, மனித உரி­மை­கள், ஜன­நா­ய­கம் குறித்து அமெ­ரிக்கா அதி­கம் வலி­யு­றுத்­தக் கூடாது என்று கடற்­ப­டை­யின் முன்­னாள் தள­பதி அட்­மி­ரல் ஜெயந்த கொலம்­பகே தெரி­வித்­துள்­ளார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா விடு­தி­யில் பாத் பைன்­டர் பவுண்­டே­ச­னின் ஏற்­பாட்­டில் இந்தோ- – பசு­பிக் பிராந்­தி­யம் தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது.
இதில் பங்­கேற்ற அமெ­ரிக்க இரா­ஜாங்­கத் திணைக்­க­ளத் தின் தெற்கு மத்­திய ஆசி­யா­வுக்­கான பதில் முதன்மை பிரதி உத­விச் செய­லர் தோமஸ் எல் வஜ்டா உள்­ளிட்ட அமெ­ரிக்க அதி­கா­ரி­க­ளி­டமே, கடற்­ப­டை­யின் முன்­னாள் தள­பதி மேற்­கண்ட கருத்தை வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.
‘இலங்கை ஆபத்­தான நில­மை­யில் இருக்­கி­றது. இது­போன்­ற­தொரு நில­மையை இதற்கு முன்­னர் நாங்­கள் எதிர்­கொண்­ட­தில்லை. எமது பொரு­ளா­தார வளர்ச்சி ஆப்­கா­னிஸ்­தானை விட கொஞ்­சமே அதி­க­மாக இருக்­கி­றது. 30 ஆண்­டு­கா­லப் போரின் போது இருந்­ததை விட இது மோச­மான நிலை. போரின் போது கூட பொரு­ளா­தா­ரம் வளர்ச்சி கண்­டது. இலங்­கை­யு­டன் அமெ­ரிக்­கா­வின் ஈடு­பாடு மிக முக்­கி­ய­மா­னது. இலங்கை போன்ற நாடு­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றும் போது, அமெ­ரிக்கா மனித உரி­மை­கள், ஜன­நா­ய­கத்தை வலி­யு­றுத்­து­கி­றது.
30 ஆண்­டு­கால மோதல்­க­ளின் போது ஏற்­பட்ட பெரிய இழப்­பு­டன் ஒப்­பி­டு­கை­யில், இப்­போது மக்­க­ளின் தனி­ம­னித பாது­காப்பு அதி­க­ரித்­துள்­ளது. 2009ஆம் ஆண்டு மே மாதத்­துக்கு முன்­னர் நாங்­கள் மாதம் தோறும் குறைந்­தது 250 உயிர்­களை இழந்­தோம். இப்­போது எத்­தனை பேரை இழக்­கி­றோம்? ஜன­நா­ய­கம், எமக்கு எதைக் கொடுத்­தது? குறு­கி­ய­வா­தம், பிள­வு­கள், இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டு­கள், இவற்­றைத் தான் ஜன­நா­ய­கம் எமக்கு கொடுத்­தது’ என்று கூறி­னார்.
இதற்­குப் பதி­ல­ளித்­துப் பேசிய அமெ­ரிக்­கா­வின் பதில் முதன்­மைப் பிரதி உத­விச்­செ­ய­லர் வஜ்டா, இலங்­கை­யின் எனது குறு­கிய பய­ணத்­தின் போது, இந்­தக் கருத்தை என்­னி­டம் வலி­யு­றுத்­திய முத­லா­வது ஆள் கொலம்­பகே அல்ல, என்று குறிப்­பிட்­டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.