யா/நாவற்குழி மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2019

2019.01.29 செவ்வாய்கிழமையா/நாவற்குழி மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு  1:30 மணியளவில் கைதடி வட மாகாண சபை முன்பாக பாடசாலை முதல்வர் திரு.சி பவளகுமாரன் அவர்கள் ஒலிம்பிக் தீபச்சுடரினை ஏற்றிவைக்க பாடசாலை ஒழுக்கம் விளையாட்டில்

பிரகாசிக்கின்ற மாணவனான செல்வன் யோசியாவின் கைகளில் ஏந்தியவாறு இவர்களுடன் பாடசாலை சிரேஸ்ட மாணவ தலைவன் மற்றும் மாணவ தலைவி இல்ல அணித்ததலைவன் மற்றும் இல்லத்தலைவி,மரதன் ஓட்ட வீரன் செல்வன் சுஜீவன் இவர்களோடு பாடசாலை விளையாட்டு செயலாளர் திரு சுசந்த ஆசிரியருடன் விளையாட்டு பொறுப்பாசிரியர்கள், பழையமாணவர்கள்
அணி சேர ஒலிம்பிக் தீபமானது நடை பவனியாக நாவற்குழி சந்தியூடாக பாடசாலை முன்றலை வந்தடைந்து இல்ல விளையாட்டுப்போட்டியானது அனைவரும் மெய்சிலிர்க்கும் வண்ணம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது
அனைத்து நிகழ்வுகளையும் திறம்பட நிகழ்த்த தோழோடு தோழ்நின்று உழைத்த உள்ளூர் பழைய மாணவர்கள் அனைவருக்கும் மணமார்ந்த நன்றி கலந்த பாராட்டுக்கள்
அத்தோடு புலம்பெயர் பாடசாலை பழைய மாணவர்கள்,மற்றும் நலன்விரும்பிகள்,அதிபர் ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள்,பெற்றோர்கள்,விருந்தினர்கள் இராணுவ வீரர்கள், இல்ல பொறுப்பாசிரியர்கள்,பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் நன்றிகலந்த பாராட்டுக்கள்
நன்றி

No comments

Powered by Blogger.