மொழியுரிமை மீறல் வாகன ஓட்டப்பதிவு படிவத்தில் !

இலங்கை அரசினால் வழங்கப்படும் வாகன ஓட்டப்பதிவு படிவம் 268 மற்றும் 268எ ஆகிய விண்ணப்படிவங்கள் தமிழ் மொழியில் வழங்கப்படாமையானது மொழி உாிமை மீறல் என்பதுடன், 16 ஆ வது அரசமைப்புத் திருத்தத்துக்கு முரணானது என்று வடக்கு மாகாண அவைத் தலைவா் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வடக்கு ஆளுநருக்கும், பிரதம செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னைய காலங்களில் இவ்வாறான படிவங்கள் உள்ளூரில் அச்சிடப்பட்டமையால் தமிழ் மொழிப்பாவனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கணக்காய்வு கேள்வி அடிப்படையிலே அரச அச்சகத்தினால் வழங்கப்படும் படிவங்கள் பாவிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

எனினும் கணக்காய்வு பகுதி 268 மற்றும் 268 எ பாவிக்க வேண்டுமென தெரிவித்திருக்கவில்லை, அதற்கமைவாக காணப்படவில்லை என்றே கூறப்பட்டிருக்கின்றது.

எது எவ்வாறாக இருப்பினும், வடமாகாணசபையின் நிா்வாகத்துக்குட்பட்ட அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் தமது நிா்வாகச் செயற்பாடுகளில் தமிழ் மொழிக்கான அந்தஸ்த்தை வழங்கவேண்டியது அரசமைப்பு அடிப்படையில் கட்டாயமானது.

எனவே இவை தொடா்பில் கவனம் செலுத்தி உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.